நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் குறைவாக தடுப்பூசி போட்டுக் கொண்ட பகுதிகளில் எண்ணிக்கையை மேலும் அதிகப்படுத்துவதற்காக மாநில அரசுகள் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும் தடுப்பூசி போட்டவர்கள் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. இதற்கிடையில் ஓமைக்ரான் வைரஸ் கூடுதல் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் தடுப்பூசி குறைவாக போட்டு கொண்ட பகுதிகளில், பொதுமக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்வதாய் ஊக்குவிக்கும் விதமாக அரசு சார்பில் பல்வேறு சலுகைகள் ,கட்டுப்பாடுகளை அறிவிக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் குஜராத் மாநிலம் அகமதாபாத் மாநகராட்சி அதிகாரிகள் அசத்தலான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர். அந்த வகையில் ஒரு தடுப்பூசி போட்டுக் கொள்வதில் ஒருவருக்கு மட்டும் 60 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளனர். அதன்படி டிசம்பர் 1 ஆம் தேதிக்கும் ஏழாம் தேதிக்கு இடைப்பட்ட காலத்தில் இரண்டாம் டோஸ் போட்டு கொண்டவர்கள் மட்டுமே இந்த போட்டிக்கு தகுதி ஆனவர்கள். இவர்களில் குலுக்கல் முறையில் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டு அவருக்கு 60,000 ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது. இதனால் அங்குள்ள மக்கள் தடுப்பூசி போட ஆர்வம் காட்டி வருகின்றனர்.