Categories
தேசிய செய்திகள்

“மாரி ஆத்தாவுக்கே தடுப்பூசியா” சாமியாடி நர்ஸை விரட்டிய மூதாட்டி…. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

நாடு முழுவதும் கொரோனாவை முற்றிலும் ஒழிப்பதற்காக தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் புதுச்சேரியில் கொரோனா தடுப்பு நடவடிக்கையின் முக்கிய அங்கமாக அனைவருக்கும் 100% தடுப்பூசி செலுத்தும் பணியில் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் அனைவருக்கும் தடுப்புசி செலுத்தும் விதமாக வீடு வீடாக சென்று தடுப்பூசி செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் நவம்பர் 30-ஆம் தேதி காலை புதுச்சேரி மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள வயதான தம்பதியினருக்கு தடுப்பு செலுத்த சுகாதாரத் துறையினர் சென்றுள்ளனர். அப்போது அவர்களுக்கு தடுப்பூசி செலுத்திக் கொள்ள விருப்பமில்லை என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் தடுப்பூசி போட்டுகொண்டால் எந்த பாதிப்பும் ஏற்படாது என தடுப்பூசி எடுத்துக்கொள்வதுதான் பாதுகாப்பானது என்று சுகாதாரத்துறை ஊழியர்கள் தடுப்பூசிகள் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறியுள்ளனர்.

ஆனாலும் அந்தத் தம்பதி மறுப்பு தெரிவித்து வந்துள்ளனர். இதனையடுத்து திடீரென்று அந்த வயதான மூதாட்டி மாரியாத்தாவுக்கு தடுப்பூசியை சேராது என்று சாமி ஆடியுள்ளார். இதனால் செய்வதறியாது திகைத்த சுகாதாரத்துறை ஊழியர்கள் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர். இந்த காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |