வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பல்வேறு மாவட்டங்களிலும் மழை கொட்டித் தீர்த்ததனால் சென்னை உட்பட சில இடங்களில் தேங்கிய மழை நீரே இன்னும் வடியவில்லை. அடுத்தடுத்து மழை பெய்து மக்களுடைய இயல்பு வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
இந்த நிலையில் அந்தமான் கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், நாளை புயலாகவும் வலுப்பெற்று மத்திய வங்கக் கடல் பகுதியில் நகரக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புதிதாக உருவாகியிருக்கும் இந்த புயலுக்கு “ஜாவித்”என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஜாவித் என்றால் அரபு மொழியில் கருணை என்று அர்த்தம். இந்த புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒடிசா மாநிலத்திற்கு ரெட் அலெர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.