மீனம் ராசி அன்பர்களே..!! இன்று விரோதங்களை வளரவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டிய நாளாக இருக்கும். வீடு மாற்றம் உத்தியோக மாற்றம் உங்களுக்கு உறுதியாக கூடும். பக்கபலமாக இருக்கும் நண்பர்களில் ஒரு சிலர் விலகிச் செல்லக் கூடும். பற்றாக்குறை இன்று அதிகரிக்கும். மன குழப்பம் நீங்கும். காரியத்தில் வெற்றி இருக்கும். எந்த சூழ்நிலையிலும் தன்னம்பிக்கையை மட்டும் விட்டுவிடாதீர்கள். இன்று தடைப்பட்டுவந்த காரியங்கள் தடை நீங்கி சாதகமாக நடந்து முடியும். முக்கிய நபர்களின் அறிமுகமும் கிடைக்கும். அதனால் நன்மை ஏற்படும்.
கலைத்துறையினருக்கு சகஜ நிலை காணப்படும். நண்பர்கள் மூலம் நல்ல தகவல் வந்து சேரும். மனதில் தைரியம் அதிகரிக்கும். இன்று கொடுக்கல்வாங்கல் விஷயங்கள் கூட ஓரளவு சிறப்பை கொடுக்கும். இன்று பணம் பரிவர்த்தனையின் மட்டும் கொஞ்சம் கவனமாக நடந்துகொள்ளுங்கள். இன்று தனவரவு கிடைப்பதில் கொஞ்சம் காலதாமதம் பிடிக்கும். அதற்கேற்றார் போல் உங்கள் செயல்பாடுகள் இருக்கட்டும். இன்று குடும்பத்தில் ஓரளவு மகிழ்ச்சியும் ஒற்றுமையும் காணப்படும்.
மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தை பெறகூடும். ஆசிரியர்களின் ஒத்துழைப்பு இருக்கும். சக மாணவர்களின் ஒத்துழைப்பும் இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து செல்லுங்கள். வெள்ளை நிறம் உங்களுக்கு சிறப்பு வாய்ந்த நிறமாக அமையும். அதுமட்டுமில்லாமல் இன்று வெள்ளிக்கிழமை என்பதால் ஏழு நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்னதானமாக வழங்குங்கள். உங்களுடைய கர்ம தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வ செழிப்பை ஏற்படுத்திக்கொடுக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 4 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் சிவப்பு நிறம்