இங்கிலாந்தின் பாராளுமன்றத்தில் அமைந்துள்ள வெஸ்ட் மினிஸ்டர் அரண்மனை வாசல் வழியாக நுழைந்த சந்தேகத்திற்குரிய நபரை ஆயுதமேந்திய காவல் துறை அதிகாரிகள் சுற்றி வளைத்து கைது செய்துள்ளார்கள்.
இங்கிலாந்து பாராளுமன்றத்தில் அமைந்துள்ள வெஸ்ட்மினிஸ்டர் அரண்மனை வாசலில் சந்தேகத்திற்குரிய மர்ம நபர் ஒருவர் நுழைந்துள்ளார். இதனை கண்ட ஆயுதமேந்திய காவல்துறை அதிகாரிகள் அந்த மர்ம நபரை சுற்றிவளைத்து கைது செய்துள்ளார்கள்.
இதுதொடர்பான சி.சி.டி.வி காட்சிகளில் இங்கிலாந்து பாராளுமன்றத்திற்குள் நுழைந்த அந்த மர்ம நபர் அங்கேயே சைக்கிளில் சுற்றி திரிந்தது கண்டறியப்பட்டுள்ளது.
அதன்பின்னர் அவர் சைக்கிளை ஓரமாக நிறுத்தி வைத்துவிட்டு பாராளுமன்றத்தின் வாசல் வழியாக உள்ளே நுழைந்துள்ளார். இந்த சம்பவம் இங்கிலாந்து பாராளுமன்றத்தில் பரபரப்பை ஏற்படுத்தியதையடுத்து அங்கு ஆயுதமேந்திய ஏராளமான காவல்துறை அதிகாரிகள் குவிக்கப்பட்டுள்ளார்கள்.