ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் தக்கவைக்கப்பட்டதை மிகப்பெரிய கவுரவமாக கருதுகிறேன் என முகமது சிராஜ் கூறியுள்ளார் .
15-வது சீசன் ஐபிஎல் தொடரில் லக்னோ ,அகமதாபாத் 2 புதிய அணிகள் சேர்க்கப்பட்டு மொத்தம் 10 அணிகள் விளையாட உள்ளது .இந்நிலையில் ஏற்கனவே உள்ள 8 அணிகள் தங்கள் அணியில் தக்க வைக்கப்படும் 4 வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதன்படி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி விராட் கோலி ,மேக்ஸ்வெல் மற்றும் முகமது சிராஜ் ஆகியோரை தங்கள் அணியில் தக்கவைத்துள்ளது .ஆனால் நடப்பு சீசனில் ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணியில் அதிக விக்கெட் கைப்பற்றி ஊதா நிற தொப்பியை தன் வசப்படுத்திய ஹர்ஷல் படேல் அணியில் தக்க வைக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் முகமது சிராஜ் தக்க வைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் ஆர்சிபி அணியில் நான் தக்க வைக்கப்பட்டதை மிகப்பெரிய கவுரவமாக கருதுகிறேன் என முகமது சிராஜ் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது,” அணியில் என்னை தக்கவைத்து என் மீது நம்பிக்கை வைத்த ஆர்சிபி குடும்பத்தினருக்கு நன்றி. உண்மையில் நான் பெருமைப்படுகிறேன். ஆர்சிபி ரசிகர்கள் தொடர்ந்து எங்களுக்கு ஆதரவு அளித்து நேசிக்க வேண்டும் ” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.