Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மகனை தேடிய பெற்றோர்…. நண்பர்களை பிடித்த போலீஸ்…. வெளியான அதிர்ச்சி தகவல்…!!

நடுக்கடலில் படகு கவிழ்ந்ததால் 10-ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டத்தில் உள்ள எண்ணூர் பகுதியில் குப்புசாமி-கலையரசி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு பிரசாந்த் என்ற மகன் இருந்துள்ளார். இந்த சிறுவன் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் நண்பர்களுடன் விளையாட சென்ற பிரசாந்த் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பிரசாந்தின் பெற்றோர் மகனை அனைத்து இடங்களிலும் தேடி பார்த்துள்ளனர். ஆனால் அவர் கிடைக்காததால் உடனடியாக எண்ணூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பிரசாந்தின் நண்பர்களான ஐவி மற்றும் சந்துரு ஆகிய இருவரையும் பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்துள்ளது. அதாவது கடந்த 27-ம்தேதி பிரசாந்த், ஐவி, சந்துரு ஆகிய 3 பேரும் புயல் காரணமாக மீனவர்கள் கரையில் நிறுத்தி வைத்திருந்த படகை எடுத்து கொண்டு கடலுக்கு சென்றுள்ளனர். இதனையடுத்து பலத்த காற்றினால் படகு நடுக்கடலில் கவிழ்ந்ததால் பிரசாந்த் நீரில் மூழ்கி இறந்து விட்டார். மற்ற 2 பேரும் நீந்தி கரைக்கு வந்துவிட்டனர்.

இதனை கூறினால் பெற்றோர் திட்டுவார்களோ என்ற அச்சத்தில் இருவரும் யாரிடமும் சொல்லாமல் இருந்தது தெரியவந்துள்ளது. இதற்கிடையில் நேற்று பிரசாந்தின் உடல் மஞ்சூர் அருகே கரை ஒதுங்கியுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பிரசாந்தின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |