Categories
தேசிய செய்திகள்

ஹைதராபாத் திஷா வழக்கு : தப்பியோடிய குற்றவாளிகள் என்கவுண்டரில் கொல்லப்பட்டனர்..!!

தெலங்கானாவில் மருத்துவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் நான்கு பேரையும் காவல்துறையினர் என்கவுண்டரில் சுட்டுக்கொன்றனர்.

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் கடந்த 27ஆம் தேதி கால்நடை மருத்துவர் நான்கு பேரால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்துக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் லாரி ஓட்டுநர்கள் இருவர், கிளீனர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.

Image result for telangana encounter

வழக்கு விசாரணை விரைவு நீதிமன்றத்தில் உள்ளது. குற்றவாளிகளை காவலில் எடுத்து விசாரணை செய்துவந்த காவல்துறையினர், குற்ற நிகழ்விடத்திற்கு அழைத்துச் சென்றனர். விசாரணையின்போது குற்றவாளிகள், நான்கு பேரும் தப்பியோட முயற்சித்தனர்.

Image result for telangana encounter

அவர்களை தடுக்கும் முயற்சியில் கால்துறையினர் ஈடுபட்டு துப்பாக்கி முனையில் தடுத்தனர். அதையும் மீறி தப்பியோடிய அவர்கள் நான்கு பேரையும் என்கவுண்டரில் சுட்டுக்கொன்றனர். இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துவந்த நிலையில், என்கவுண்டர் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

 

Categories

Tech |