Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மாணவிகளுக்கு ஆபாச குறுஞ்செய்தி…. தொல்லை கொடுத்த பேராசிரியர்…. போலீஸ் நடவடிக்கை…!!

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்து வந்த பேராசிரியரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சென்னை மாவட்டத்தில் உள்ள திருமழிசை பகுதியில் தமிழ்ச்செல்வன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கோயம்பேட்டில் உள்ள தனியார் கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார்.இந்நிலையில் ஆன்லைன் வகுப்பிற்கு வரும் மாணவிகளுக்கு தமிழ்ச்செல்வன்  ஆபாசமான குறுஞ்செய்திகளை அனுப்பி உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவிகள் நேற்று முந்தினம் கல்லூரியில்  உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்களுக்கு துணையாக பச்சையப்பா கல்லூரி மாணவர்களும் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து கல்லூரி நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து  சென்ற போலீஸ்  கமிஷனர் தலைமையிலான காவல்துறையினர்  மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அப்போது தமிழ்செல்வனை  கைது செய்யும் வரை போராட்டத்தை கைவிடமாட்டோம் என மாணவர்கள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து மாணவிகள் அளித்த புகாரின் பெயரில் தமிழ்ச்செல்வனை  பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 2 பிரிவுகளில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். அதன் பிறகு மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர். இந்நிலையில் தலைமறைவாக இருந்த தமிழ்ச்செல்வனை கோயம்பேடு காவல் துறையினர் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தமிழ்ச்செல்வனின் செல்போனை கைப்பற்றி வேறு எந்த மாணவிகளுக்கும் அவர் பாலியல் தொந்தரவு அளித்துள்ளாரா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Categories

Tech |