கோவில் உண்டியலை உடைத்து பணம் மற்றும் சிசிடிவி கேமராக்களை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நாட்டார்மங்கலம் கிராமத்தில் செல்லியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்குள் நள்ளிரவு நேரத்தில் புகுந்த மர்ம நபர்கள் உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடித்துள்ளனர். மேலும் மர்ம நபர்கள் கோவிலில் பொருத்தியிருந்த 30 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள சிசிடிவி கேமரா மற்றும் மானிட்டரை திருடி விட்டு அங்கிருந்து தப்பி ஓடினர்.
இதனை அடுத்து மறுநாள் காலை கோவிலுக்கு சென்ற பொதுமக்கள் திருட்டு சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் மற்றும் கைரேகை நிபுணர்கள் அங்கு பதிவான தடயங்களை சேகரித்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கோவிலில் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.