Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

தொடர்ந்து பெய்யும் மழை…. திடீரென இறந்த ஆடுகள்….. புதுக்கோட்டையில் சோகம்…!!

நோய் தாக்கியதால் 12 ஆடுகள் உயிரிழந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள விராலிமலை தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. இதனால் நோய் தாக்கி அங்குள்ள கால்நடைகள் தொடர்ந்து இறக்கின்றன. இந்நிலையில் கல்குடி கிராமத்தில் வசிக்கும் சின்னகண்ணு என்பவருக்கு சொந்தமான 9 செம்மறி ஆடுகள் நோய் தாக்கி பரிதாபமாக உயிரிழந்துவிட்டது.

இதனையடுத்து அறந்தாங்கி பகுதியில் வசிக்கும் சிதம்பரம் என்பவருக்கு சொந்தமான 2 செம்மறி ஆடுகளும், பழனியம்மாள் என்பவருக்கு சொந்தமான ஒரு வெள்ளாடும் உயிரிழந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |