Categories
தேசிய செய்திகள்

JUSTIN: காந்தி சிலை முன் 12 எம்.பி.க்கள்…. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் 2 ஆம் நாளாக தர்ணா….!!!

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட 12 எம்பிக்கள் இன்று 2-வது நாளாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த நவம்பர் 29-ஆம் தேதி தொடங்கி வரும் டிசம்பர் 23-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரின் முதல் நாலே 3 வேளாண் சட்ட திருத்த மசோதா இரண்டு அவைகளிலும் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது. இருப்பினும் சட்ட திருத்த மசோதா மீது விவாதம் நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து நாடாளுமன்றத்தில் கண்ணியக் குறைவாக நடந்து கொண்ட 12 எம்பிக்களை சஸ்பெண்ட் செய்வதாக மாநிலங்களவை அவைத்தலைவர் வெங்கைய நாயுடு உத்தரவிட்டார்.

பின்னர்  12 எம்பிக்களும் மன்னிப்பு கேட்டால் மீண்டும் அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில் அதற்கு 12 எம்பிக்களும் மறுப்பு தெரிவித்தனர். மேலும் தாங்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலை முன்பாக நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனை தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் எதிர்க்கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்கள் கருப்பு சட்டை அணிந்து இரண்டாம் நாளாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Categories

Tech |