Categories
உலக செய்திகள்

பிற நாட்டினர் வாழ சிறந்த நகரம் எது…? துபாய்க்கு கிடைத்த பெருமை…!!

பிற நாட்டினரின் சிறப்பான வாழ்க்கைக்கும், பணி சூழலுக்கும் சிறந்த நகரங்களில் துபாய் 3-ஆம் இடத்தையும், அபுதாபி 16-ஆம் இடத்தையும் பிடித்திருக்கிறது.

சர்வதேச நிறுவனம் உலகில் இருக்கும் 57 நகரங்களில், பிற நாட்டினர் சிறப்பாக வாழ்வதற்கும் பணியாற்றுவதற்கு எது சிறந்த நகரம் ? என்பது தொடர்பில் புள்ளி விவரங்களை சேகரித்து இருக்கிறது. இதில், சுமார் 12,420 மக்களிடம் கேட்கப்பட்ட கருத்துக் கணிப்புகளின் படி, சிறந்த நகரங்களின் பட்டியலில் மூன்றாம் இடம் துபாய் நகரத்திற்கு கிடைத்திருக்கிறது.

கடந்த வருடம் 20வது இடத்தில் துபாய் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது, துபாயில் பிற நாட்டில் இருந்து வரும் மக்கள், சுலபமாக தங்களின் பணி மற்றும் இருப்பிடத்தை அமைத்துக்கொள்ள முடிகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அரபி போன்ற உள்ளூர் மொழிகளை தான் பேச வேண்டும் என்ற கட்டாயமில்லை.

அவர்கள் தெரிந்த மொழிகளில் பேசிக் கொள்ளலாம். மேலும், துபாயில் சுமார் 190 நாடுகளை சேர்ந்த மக்கள் வசிக்கின்றனர். எனவே, பிற நாட்டில் இருந்து வருபவர்கள் எளிதில் அவர்களுடன் பழகி விட முடிகிறது. மேலும், அரசியல் நிலைப்பாடு, பாதுகாப்பு போன்ற பல காரணங்களால்  துபாய், வெளிநாட்டவர்கள் வாழ சிறந்த நகரம், என்ற பெருமையை பெற்றிருக்கிறது.

Categories

Tech |