மாடியிலிருந்து தவறி கீழே விழுந்து கியாஸ் ஏஜென்சி ஊழியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள நன்மங்கலம் பாரத் தெரு பிரான்சிஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கியாஸ்ஏஜென்சி நிறுவனத்தில் சிலிண்டர்களை டெலிவரி கொடுக்கும் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் பிரான்சிஸ் நேசமணி நகரில் மாடியில் இருக்கும் ஒரு வீட்டிற்கு கேஸ் சிலிண்டர் டெலிவரி கொடுப்பதற்காக சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக கால் தவறி தோளில் வைத்திருந்த கேஸ் சிலிண்டருடன் பிரான்சிஸ் கீழே விழுந்து படுகாயமடைந்தார்.
அதன்பின் அருகில் உள்ளவர்கள் பிரான்சிசை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி பிரான்சிஸ் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.