10-ஆம் வகுப்பு மாணவியை கடத்தி சென்று திருமணம் செய்த குற்றத்திற்காக தொழிலாளியை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சியில் 10-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி வசித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த மாணவி காணாமல் போனதால் உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்துள்ளனர். இதுகுறித்து மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தியுள்ளனர்.
அந்த விசாரணையில் ஆனைமலையில் வசிக்கும் தொழிலாளியான சபரீஸ்வரன் என்பவர் மாணவியை காதலித்து தெரியவந்துள்ளது. மேலும் ஆசை வார்த்தைகள் கூறி சபரீஸ்வரன் மாணவியை நாமக்கல்லுக்கு கடத்தி சென்று திருமணம் செய்துள்ளார். இதனையடுத்து காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று சபரீஸ்வரனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். மேலும் மாணவியை மீட்டு அவரது பெற்றோரிடம் ஒப்படைத்து விட்டனர்.