ஒற்றை காட்டு யானை சாலையை கடந்து சென்ற சம்பவம் வாகன ஓட்டிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தேன்கனிக்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக ஒற்றை காட்டு யானை சுற்றி திரிகிறது. இந்த காட்டு யானை இரவு நேரத்தில் விவசாய பயிர்களை தின்றும், மிதித்தும் நாசப்படுத்தியுள்ளது. இந்நிலையில் தளி அருகில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை காட்டு யானை சாலையை கடந்து சென்றதை பார்த்த வாகன ஓட்டிகள் அச்சத்தில் வாகனங்களை ஆங்காங்கே நிறுத்திவிட்டனர்.
அந்த யானை வனப்பகுதிக்குள் சென்ற பிறகு வாகன ஓட்டிகள் அங்கிருந்து சென்றுள்ளனர். இந்த காட்டு யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டியடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.