நிதி நிறுவன ஊழியர் தங்கும் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள ஒட்டன்சத்திரம் பகுதியில் விஜயகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் குஜராத் மாநிலத்தில் இருக்கும் நிதி நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த 25-ஆம் தேதி கோவை மாவட்டத்தில் உள்ள காந்திபுரத்தில் இருக்கும் தங்கும் விடுதியில் விஜயகுமார் அறை எடுத்து தங்கியுள்ளார். இந்நிலையில் நீண்ட நேரமாகியும் அறையின் கதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த ஊழியர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர்.
அப்போது விஜயகுமார் தூக்கில் சடலமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் விஜயகுமாரின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விஜயகுமார் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.