சாலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றி வாகன நிறுத்தங்களை முறைப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஈரோடு மாநகர் பகுதியில் வாகன நெரிசலானது அதிகமாக காணப்படுகிறது. இதனிடையில் குறுகிய சாலைகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமல் வாகனங்களை ரோட்டில் நிறுத்துவதால் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதேபோன்று ஈரோடு சுவஸ்திக் கார்னர் பகுதி மேட்டூர் சாலையில் உள்ள கடைகளின் விளம்பர பதாகைகளை ரோட்டை ஆக்கிரமித்து வைத்துள்னர்.
இதனால் அங்கு வரும் வாடிக்கையாளர்கள் தங்கள் வாகனங்களை சாலையில் நிறுத்தி விடுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே இதுபோன்று மாநகர் பகுதியில் பல சாலைகளில் இருக்கிறது. ஆகவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றி வாகன நிறுத்தங்களை முறைப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.