மயிலாடுதுறை மாவட்டத்தில் அதிக அளவிலான பயணிகளை ஏற்றிச் சென்ற அரசு பேருந்தை இயக்க முடியாமல் கோபமடைந்த ஓட்டுநர், நடு சாலையில் பேருந்தை நிறுத்தி விட்டுச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் ஆயிரக்கணக்கானோர் தினசரி மயிலாடுதுறை நகருக்கு பேருந்து மூலமாக வந்து செல்கிறார்கள்.
அதில் சில உள் கிராமங்களுக்கு ஓரிரு பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன. அதனால் கூட்ட நெரிசலையும் பொருட்படுத்தாமல் மாணவர்கள் பேருந்தில் தொங்கியபடி பயணம் செய்து வருகின்றனர். இந்நிலையில் அதிக கூட்டமாக இருப்பதால் பேருந்தை தன்னால் இயக்க முடியாமல் சிரமப்பட்ட ஓட்டுநர், பேருந்தை சாலையில் நிறுத்தி விட்டு சென்று விட்டார். அதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.