தமிழகத்தில் பல வருடங்களாகவே தமிழ் புத்தாண்டு குறித்த விவாதம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. சித்திரை மாதத்தில் புத்தாண்டு கொண்டாடுவது தமிழ் வழக்கம் இல்லை. அது சமஸ்கிருத வழக்கம். தை மாதத்தின் முதல் நாளை வரவேற்கும் விதமாக தமிழ் புத்தாண்டு என்பது தான் திமுக தரப்பு தெரிவிக்கிறது. அதேபோல தமிழறிஞர்கள் பலரும் தை 1 தான் தமிழ் புத்தாண்டு என்று கூறிக் கொண்டுள்ளனர். மற்றொரு தரப்பினர் சித்திரை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.
கடந்த அதிமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் புத்தாண்டு சித்திரை தான் என்று மீண்டும் மாற்றப்பட்டது. இதற்கிடையில் தமிழக அரசு வழங்கிய பொங்கல் பரிசுத்தொகுப்பு பையில் தைப் புத்தாண்டு என்று குறிப்பிடப்பட்டது இணையத்தில் வெளியாகியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பொங்கல் பரிசு பையில் தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்து என்று குறிப்பிடப்பட்டிருப்பது தமிழக அரசு மீண்டும் தை முதல் நாளை தமிழ் புத்தாண்டாக அறிவித்த போகிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக தலைவர் எச். ராஜா, திமுக திருந்தவே திருந்தாது இந்துக்களின் மத நம்பிக்கை மற்றும் பண்டிகை நாட்களில் தலையிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது மட்டுமல்லாமல் மதச்சார்பின்மைக்கு விரோதமானது ஆகும். சித்திரையில் தான் தமிழ்ப் புத்தாண்டு கொண்டாட வேண்டும். கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் இதை கொண்டாடுவது கிடையாது. இது இந்துக்கள் பண்டிகை எனவே திமுகவை புறக்கணிப்போம் என்று குற்றம்சாட்டியுள்ளார்.