Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

லாரியில் இதுவா இருக்கு…? நைசாக தப்பிய 3 பேர்…. போலீஸ் விசாரணை….!!

கிராவல் மண்ணை கடத்தியது தொடர்பாக தப்பி சென்ற 3 பேர் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு  வருகின்றனர். 

ஈரோடு மாவட்டத்திலுள்ள வாய்ப்பாடி பகுதியில் கிராவல் மண்ணை கடத்தி செல்வதாக வருவாய்த் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின்படி நில வருவாய் அதிகாரி முத்துலட்சுமி, வாய்ப்பாடி கிராம நிர்வாக அலுவலர் இளவரசன் மற்றும் வருவாய்த்துறை ஊழியர்கள் சம்பவ  இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது அவ்வழியாக வந்த 3 டிப்பர் லாரிகளை அதிகாரிகள் நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.

அந்த சோதனையில் அனுமதி இன்றி கிராவல் மண்ணை எடுத்து சென்றதும், லாரி உரிமையாளர்கள் பெருந்துறை பகுதியை சேர்ந்தவர்கள் என்பதும் அதிகாரிகளுக்கு தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து அதிகாரிகள் லாரி டிரைவர்களிடம் உரிய ஆவணங்களை கேட்டனர். அப்போது லாரி டிரைவர்கள் 3 பேரும் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர். அதன்பின் 3 லாரிகளையும் அதிகாரிகள் பறிமுதல் செய்து காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். இது தொடர்பாக வருவாய்த் துறையினர் கொடுத்த புகாரின்படி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய 3 பேர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |