Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

வீட்டிற்கு அழைத்து சென்ற தொழிலாளி…. 5 வயது சிறுமிக்கு நடந்த கொடுமை…. நீதிபதியின் அதிரடி உத்தரவு…!!

5 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் ஜெயில் தண்டனை வழங்கி நீதிபதி அதிரடி உத்தரவிட்டுள்ளார்.

கடலூர் மாவட்டத்திலுள்ள எனதிரிமங்கலம் கிராமத்தில் கூலித்தொழிலாளியான தனசேகர் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2019-ஆம் ஆண்டு அப்பகுதியில் வசிக்கும் 5 வயது சிறுமியை தனசேகர் தனது வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது குறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் தனசேகரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

இந்த வழக்கினை விசாரித்த நீதிமன்றம் தனசேகருக்கு 20 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு கடலூர் மாவட்ட சமூக பாதுகாப்புத்துறை நல வாழ்வு நிதியிலிருந்து 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Categories

Tech |