மூதாட்டியிடம் இருந்து மர்ம நபர் தங்க சங்கிலியை பறித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டத்திலுள்ள விருத்தாசலம் பகுதியில் ஆனந்தமணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மங்கையர்கரசி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினர் தூங்கி கொண்டிருந்த போது நள்ளிரவு நேரத்தில் மர்ம நபர் வீட்டிற்குள் புகுந்து விட்டார்.
இந்நிலையில் மங்கையர்கரசி அணிந்திருந்த 10 பவுன் தங்க சங்கிலியை பறித்து விட்டு அந்த மர்ம நபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மூதாட்டியிடம் இந்த தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.