பாவனா கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் டிவி மூலம் பிரபல தொகுப்பாளினி ஆனவர் பாவனா. இவர் தற்போது ஸ்டார்ஸ் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் கிரிக்கெட் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். சமீபகாலமாக, சின்னத்திரையின் பிரபலங்கள் வாங்கும் சம்பளங்கள் குறித்த தகவல் வெளியாகி வருகின்றன.
இந்நிலையில், இவர் மீண்டும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க உள்ளார். ஆனால், அவர் இனிமேல் விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்காமல், கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.