Categories
உலக செய்திகள்

‘ஜஸ்டின் ட்ரூடோ இரட்டை வேடக்காரர்’ – செமத்தியாக திட்டிய ட்ரம்ப்!

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஒரு இரட்டை வேடக்காரர் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சாடியுள்ளார்.

லண்டனில் நடைபெற்ற நாடோ உச்சி மாநாட்டின் பகுதியாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பும், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவும் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினர்.

இதையடுத்து, அங்கு நடந்த நிகழ்ச்சியில் ஒன்றில் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரான், நெதர்லாந்து பிரதமர் மார்க் ரூத் ஆகியோருடன் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனிப்பட்ட முறையில் சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தார்.

அப்போது, அதிபர் ட்ரம்ப்புடனான செய்தியாளர்கள் சந்திப்பு குறித்து கிண்டலடித்தார். இதுதொடர்பாக வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

தூதரக வட்டாரங்களில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ள ட்ரூடோவின் பேச்சால் ஆத்திரமடைந்த ட்ரம்ப், “பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இரட்டை வேடக்காரர்” என காட்டமாக திட்டியுள்ளார்.

Categories

Tech |