Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மாணவிக்கு தொல்லை கொடுத்த வாலிபர்…. போலீஸ் நடவடிக்கை…. தொழிலாளி போக்சோவில் கைது….!!

11ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பகுதியில் துரைசாமி என்ற வாலிபர் வசித்து வந்துள்ளார். கூலித்தொழிலாளியான இவர் அதே பகுதியில் வசிக்கும் 11ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனையறிந்த மாணவியின் பெற்றோர் அதிர்ச்சியடைந்து உடனடியாக பரமத்திவேலூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். மேலும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த துரைசாமி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து கைது செய்துள்ளனர்.

Categories

Tech |