அமெரிக்காவில் ஒருவர் கொரோனா நிவாரண நிதியில் லம்போர்கினி வாகனம் மற்றும் ரோலக்ஸ் கைக்கடிகாரத்தை வாங்கியதால் அவருக்கு 9 வருடங்கள் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.
அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாகாணத்தில் வசிக்கும் லீ பிரைஸ் என்ற 30 வயது நபர் கொரோனா நிவாரண நிதியில் வாகனத்தையும், விலையுயர்ந்த கைக்கடிகாரத்தையும் வாங்கியிருக்கிறார். போலியான ஊதிய காசோலை பாதுகாப்பு திட்டத்தின், கடன் விண்ணப்பங்களை வைத்து 1.6 மில்லியன் டாலர் வாங்கியிருக்கிறார்.
மேலும், இதனை மறைக்க 3 ஷெல் நிறுவனங்களை தொடங்கி பண மோசடியில் ஈடுபட்டிருக்கிறார். மேலும் இவர் போலியான ஓட்டுனர் உரிமத்தையும், வரி பதிவுகளையும் சமர்ப்பித்திருக்கிறார். இந்நிலையில் பிரைஸ் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டதால், நீதிமன்றம் அவருக்கு ஒன்பது வருடங்கள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்திருக்கிறது.
அமெரிக்காவில், கொரோனா தொற்று பாதித்த நபர்களுக்காக தொடங்கப்பட்ட நிவாரணத் திட்டங்கள், கடந்த மே மாதம் 31-ஆம் தேதி அன்று முடிந்தது. இந்நிலையில், இத்திட்டங்களை பயன்படுத்தி நடந்த குற்றங்களுக்காக சுமார் 474 நபர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதனால், அரசுக்கு, அரை பில்லியன் டொலர்கள் இழப்பு ஏற்பட்டுள்ளது.