சுடுதண்ணீர் கொட்டியதால் மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டத்திலுள்ள இ.பி ரோட்டில் பரமன்-வீரம்மாள் தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் வீரம்மாள் குளிப்பதற்காக சுடுதண்ணீர் எடுத்துக்கொண்டு குளியலறைக்குள் சென்றுள்ளார். அப்போது திடீரென கால் தவறி கீழே விழுந்த வீரம்மாள் மீது சுடுதண்ணீர் கொட்டியதால் அவர் அலறி சத்தம் போட்டுள்ளார்.
அவரின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று மூதாட்டியை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி வீரம்மாள் பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.