கோழிப்பண்ணையில் திருடிய குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தென்காசி மாவட்டத்திலுள்ள முத்துபுரம் பகுதியில் ஜேக்கப் ஜெயக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் கரிவலம்வந்தநல்லூர் பகுதியில் கோழிப்பண்ணை வைத்து நடத்தி வருகிறார். இவரது கோழிப்பண்ணையில் வளர்த்து வந்த கோழிகள் அடிக்கடி காணாமல் போனதை கண்டு ஜேக்கப் அதிர்ச்சி அடைந்தார். இந்நிலையில் வாலிபர் ஒருவர் கோழியை திருட முயற்சிக்கும் போது ஊழியர்கள் அவரை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்துவிட்டனர்.
இதனையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அந்த வாலிபர் என்.ஜி.ஓ காலனி பகுதியில் வசிக்கும் ஹரிஹரசுதன் என்பது தெரியவந்துள்ளது. இது குறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் ஹரிஹரசுதனை கைது செய்துள்ளனர்.