போட்ஸ்வானாவில் ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் ஏராளமானோரிடம் எந்த அறிகுறிகளும் கண்டறியப்படவில்லை என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தென் ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான போட்ஸ்வானாவில் ஒமிக்ரான் உறுதி செய்யப்பட்டவர்களில் ஏராளமானோரிடம் எந்த அறிகுறிகளும் தென்படவில்லை என அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில் போட்ஸ்வானா சுகாதாரத்துறை பொறுப்பு இயக்குனர் பமீலா ஸ்மித் லாரன்ஸ் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்தபோது ” ஒமிக்ரான் உறுதி செய்யப்பட்ட 19 பேரில் ஒன்று அல்லது 2 நபர்களுக்கு மட்டுமே லேசான காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் தென்பட்டதாக தெரிவித்தார்.
இதனிடையில் வெளிநாடுகளில் இருந்து போட்ஸ்வானாவிற்கு வந்தவர்களுக்கே முதன்முதலில் ஒமிக்ரான் உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் ஐரோப்பிய நாடுகள் உட்பட பல நாடுகள் தென் ஆப்பிரிக்கா மற்றும் போட்ஸ்வானாவிற்கு விமான சேவைகளை ரத்து செய்தது மோசமான ஒன்று” என அவர் தெரிவித்தார்.