Categories
உலக செய்திகள்

“பொய் குற்றச்சாட்டால் கோடீஸ்வரியாக மாறிய பெண்!”…. எப்படி…? அமெரிக்காவில் சுவாரஸ்ய சம்பவம்…!!

அமெரிக்காவில் ஒரு கடையில் திருடியதாக ஒரு பெண் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டு, அவரை மிகப்பெரிய கோடீஸ்வரியாக மாற்றிவிட்டது.

அமெரிக்காவில் இருக்கும் அலபாமா மாகாணத்தில் வசிக்கும் செவிலியர், கடந்த 2016 ஆம் வருடத்தில், வால்மார்ட் என்ற கடையில் $48 மதிப்புடைய பொருட்களை திருடியதாக அவர் மீது பொய்யாக குற்றம் சாட்டியுள்ளனர். இதற்காக, 200 டாலர்கள் கொடுக்கவில்லை எனில், சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று மிரட்டியிருக்கிறார்கள்.

அவர், நான் திருடவில்லை என்று கூறியதை, மற்ற கடை பணியாளர்கள் ஏற்கவில்லை. அதன்பின்பு, காவல்துறையினர் அவரை கைது செய்தனர். எனினும், நான் திருடவில்லை என்றும் பணத்தை கொடுத்து தான் பொருட்களை வாங்கியதாகவும், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அதன்பின்பு, ஓராண்டு கழித்து அவர் மீது தொடரப்பட்ட வழக்கு ரத்து செய்யப்பட்டது. எனினும் தனக்கு, நஷ்ட ஈடு தருமாறு வழக்கு தொடர்ந்து, அதில் வெற்றி பெற்று சுமார் 2.1 மில்லியன் டாலர்கள் பெற்றிருக்கிறார். இதன் மூலம், அந்த செவிலியர் கோடீஸ்வரியாகிவிட்டார்.

Categories

Tech |