நீலகிரி முன்னாள் ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா திறன் மேம்பாட்டு கழக நிர்வாக இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழக முதல்வராக மு.க ஸ்டாலின் கடந்த மே 7ஆம் தேதி பதவி ஏற்றது முதல் ஐ.ஏ.எஸ் ஐ.பி.எஸ் அதிகாரிகள் அவ்வப்போது பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.. அந்த வகையில், தற்போது தமிழக அரசு 3 அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்துள்ளது..
அதன்படி, நீலகிரி முன்னாள் ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா திறன் மேம்பாட்டு கழக நிர்வாக இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.. ஆவின் நிர்வாக இயக்குனராக இருந்த கந்தசாமி பேரிடர் மேலாண்மை வருவாய் நிர்வாக ஆணையர் ஆக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.. பேரிடர் மேலாண்மை வருவாய், நிர்வாக ஆணையராக இருந்த சுப்பையன் ஆவின் நிர்வாக (பால் உற்பத்தி & பால் பண்ணை மேம்பாட்டுத்துறை) இயக்குனராக மாற்றப்பட்டுள்ளார்.