பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரோன், பிரிட்டன் பிரதமர் ஒரு கோமாளி, எதற்கும் உதவாதவர் என்று விமர்சித்திருக்கிறார்.
சமீபத்தில் ஆங்கில கால்வாய் வழியே, புலம்பெயர்ந்த மக்கள் பயணித்த சிறிய படகு கவிழ்ந்து 27 நபர்கள் பலியாகினர். எனவே, இது தொடர்பில், பிரான்ஸ் ஜனாதிபதி, பிரிட்டன் பிரதமருடன் தொலைபேசியில் பேசியிருக்கிறார். அவருடன் பேசிக்கொண்டிருந்த சமயத்தில், போரிஸ் ஜான்சன், அவருக்கு தான் எழுதிய ஒரு கடிதத்தை தன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.
அதில், இரண்டு நாடுகளின் காவல்துறையினரும் சேர்ந்து சோதனை பணி மேற்கொள்ளுதல், பிரான்ஸ் நாட்டிலிருந்து, ஆங்கில கால்வாயை கடந்து தங்கள் நாட்டிற்குள் வருபவர்களை அந்நாட்டிற்கே மீண்டும் அனுப்புவது குறித்த ஒப்பந்தம் போன்றவை இடம்பெற்றிருக்கிறது.
ஆனால், அந்த கடிதத்தை போரிஸ் ஜான்சன் வெளியிட்டது, இம்மானுவேல் மேக்ரோனுக்கு தெரியாது. அவர் தொடர்ந்து தொலைபேசியில் பேசியிருக்கிறார். அந்த சமயத்தில், அவரின் உதவியாளர்கள், போரிஸ் ஜான்சன் ட்விட்டரில் இவ்வாறு ஒரு கடிதத்தை வெளியிட்டிருக்கிறார் என்று தெரிவித்துள்ளனர்.
இதனால் கோபமடைந்த மேக்ரோன், தன் உதவியாளர்களிடம், “அவர் நன்றாக, பணிவுடன் என்னிடம் பேசுகிறார். ஆனால், பேசுவதற்கு முன் அல்லது பேசியப் பின், இப்படி கோமாளித்தனம் செய்கிறார். பிரிட்டன் ஒரு சிறந்த நாடாக விளங்குகிறது. ஆனால், அந்நாட்டின் தலைவர் ஒரு கோமாளி” என்று கூறியதோடு, தொடர்ந்து பல வார்த்தைகளால் மோசமாக விமர்சித்திருக்கிறார்.