இத்தாலி விமான நிலையத்தில் தரையிறங்கவிருந்த விமானம் ஒன்றின் மீது பறவைக்கூட்டம் மோதிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லண்டனிலிருந்து 737-800 பயணிகளுடன் புறப்பட்ட Ryanair என்ற ஜெட் விமானம் இத்தாலியில் உள்ள Bologna என்ற விமான நிலையத்தில் தரை இறங்குவதற்காக சென்று கொண்டிருந்தது. ஆனால் எதிர்பாராதவிதமாக அந்த விமானத்தின் மீது ஹெரான் பறவைகள் மோதியதால் ரத்தக்கறைகள் ஏற்பட்டதோடு, பறவைகளின் சிறகுகள் விமானத்தின் பல பகுதிகளில் சிக்கிக்கொண்டது. மேலும் என்ஜினில் சில பறவைகள் நுழைந்ததால் விமானம் திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது. அதனை தொடர்ந்து விமான இயந்திரமும் மோசமாக சேதம் அடைந்துள்ளது.
— Breaking Aviation News & Videos (@aviationbrk) November 26, 2021
ஆனால் சாதுரியமாக செயல்பட்ட விமானி விபத்து எதுவும் ஏற்படாத வகையில் விமானத்தை கவனமாக தரையிறக்கியுள்ளார். இதனால் அந்த விமானத்தில் பயணித்தவர்களுக்கு எந்த விதமான பாதிப்பும் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து புத்திசாலித்தனமாக செயல்பட்டு விமானத்தை தரையிறக்கிய விமானிக்கு பாராட்டுகளும் குவிந்த வண்ணம் உள்ளது. இந்த நிலையில் சமூக வலைத்தளத்தில் Ryanair விமானம் கொளுந்துவிட்டு எரியும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.