உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ் அருகே பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு விசாரணைக்கு ஆஜராக இருந்த இளம் பெண் தீ வைத்து எரிக்கப்பட்ட நிலையில் அவர் உயிர் பிழைப்பதற்க்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு என தகவல்கள் வெளியாகியுள்ளன.
உத்திரபிரதேச மாநிலத்தின் உன்னாவ் 23 வயது இளம்பெண் ஒருவர் பாலியல் வனம்கொடுமை செய்யப்பட்டார். இதையடுத்து காவல்நிலையத்தில் அவர் அளித்த புகாரை அடிப்படையாக கொண்டு விசாரணை மேற்கொண்ட காவல்துறை அவரை நீதிமன்றத்தில் சாட்சியாக ஆஜராகுமாறு கூறியது. இதையடுத்து நீதிமன்றத்தில் ஆஜராவதற்காக சென்று கொண்டு இருந்த இளம்பெண்ணை 5 பேர் வழிமறைத்து தூக்கிசென்று மீண்டும் பாலியல் வன்கொடுமை செய்து பின் தீ வைத்து எரித்துள்ளனர்.
இதையடுத்து லக்னோ மருத்துவமனைக்கு அவர் அழைத்து செல்லபட்டு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததது. இந்நிலையில் லக்னோ மருத்துவமனையிலிருந்து ஆம்புலன்ஸ் மூலம் டெல்லி கொண்டு செல்லப்பட்ட அந்தப் பெண் அங்கு உள்ள சப்தர்ஜங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை கண்காணிப்பாளர் சுனில் குப்தா தெரிவித்துள்ளார். மேலும் அந்த பெண் உயிர் பிழைப்பதற்கு குறைந்தளவிலான வாய்ப்புகள் மட்டுமே இருப்பதாகவும் தற்போது அவரை வென்டிலேட்டர் இல் வைத்து சிகிச்சைகள் மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.