Categories
தேசிய செய்திகள்

BIG NEWS : இந்தியாவில் 2 பேருக்கு ஓமைக்ரான் வைரஸ்…. சோதனையில் உறுதி!!

கர்நாடகாவை சேர்ந்த  2 ஆண்களுக்கு ஓமைக்ரான் கொரோனா கண்டறியப்பட்டுள்ளது.

ஓமைக்ரான் கொரோனா வைரஸ் தாக்கம் இந்தியாவில் பரவி விடக் கூடாது என்ற ஒரு எண்ணம் அனைவரது மனதிலும் இருந்து வந்த நிலையில் தற்போது, இரண்டு பேருக்கு இந்தியாவில் ஓமைக்ரான் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.. இந்தத் தொற்று கர்நாடகாவை சேர்ந்த 2 பேருக்கு தற்போது கண்டறியப்பட்டுள்ளது..

அதாவது, தென் ஆப்பிரிக்கா உட்பட 12க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து வந்தவர்களிடம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.. அவர்களில் சிலருக்கு கொரோனா இருந்தது.. ஆனால் அவர்களுக்கு ஓமைக்ரான் இருந்ததா? என்று ஆய்வு செய்யப்பட்டது.. அந்த ரிப்போர்ட்டின் முடிவு  தற்போது வெளிவந்துள்ளது..

அதில், தென் ஆப்பிரிக்காவில் இருந்து பெங்களூரு வந்தவர்களில் 66 வயது நபருக்கும், 45 வயது நபருக்கும் ஓமைக்ரான் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.. இதனால் இந்தியாவில் முதன்முதலாக உண்மை கண்டறியப்பட்டுள்ளது.. இதனை மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மேலும் ஓமைக்ரான் கண்டறியப்பட்டவர்களிடம் யார் யாரெல்லாம் தொடர்பில் இருந்தார்கள். அவருடன் பயணித்தவர்கள் யார்? என்ற விவரங்கள் எல்லாம் சேகரிக்கப்பட்டு தனிப்பட்ட பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.. இதுவரை 29  நாடுகளில் 373 பேருக்கு ஓமைக்ரான் கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Categories

Tech |