Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

தலைபாலத்தை மூழ்கடித்த வெள்ளம்…. கயிறுகட்டி கடக்கும் மக்கள்…. மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை….!!

பரளை ஆற்றுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டதால் தரைப்பாலம் மூழ்கியதால் பொதுமக்கள் பாலத்தில் கயிறு கட்டி கடந்து வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூருக்கு கடந்த 27ஆம் தேதி முதல் வைகை அணையில் இருந்து 12,000 கனஅடி வீதம் தண்ணீர் வந்தது. இந்நிலையில் பார்திபனூரில் இருந்து கமுதி பரளை ஆற்றுக்கு 5,000கனஅடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் ஆற்றில் வெள்ளபெருக்கு ஏற்பட்டு செய்யாமங்கலம் பகுதியில் உள்ள தரைப்பாலம் மூழ்கியுள்ளது. இதனால் செய்யாமங்கலம், பிரண்டைகுளம், தானேந்தால், புதுபட்டி, முனியனேந்தல் போன்ற 5 கிராமத்திற்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து அப்பகுதி பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் தரைபாலத்தில் கயிறுகட்டி இடுப்பளவு தண்ணீரில் ஆபத்தான முறையில் கடந்து வருகின்றனர். மேலும் இதற்கு உரிய நடவடிக்கை விரைவில் எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனைதொடர்ந்து செய்யாமங்கலம் பகுதியை சேர்ந்த பா.ஜ.க தொண்டர்கள் மற்றும் மற்றும் ஊராட்சி தலைவர் ஆகியோர் பள்ளி மாணவ-மாணவிகளை சுமந்து பாலத்தை கடந்து பாதுகாப்பாக பள்ளிக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

Categories

Tech |