கனடா நாட்டில் ஒரு குடியிருப்பிற்குள் ஜன்னல் வழியே மர்மநபர் நுழைந்தது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கனடாவின் ரொறன்ரோ மாகாணத்தில் நேற்று நள்ளிரவு 12 மணியளவில், ஒரு பெண் தன் வீட்டில் குளித்து கொண்டிருந்துள்ளார். அப்போது, திடீரென்று மர்மநபர் ஒருவர், குளியறையின் ஜன்னலை திறந்து கொண்டு உள்ளே புகுந்து, அந்த பெண்ணை பிடிக்க முயன்றுள்ளார். இதனால், அதிர்ந்து போன அந்த பெண் சத்தம் போட்டுள்ளார்.
அதன்பின்பு, அந்த நபர் தப்பி ஓடிவிட்டார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். அந்த மர்மநபர் இளைஞர் என்று காவல்துறையினர் கூறியிருக்கிறார்கள். அந்த நபர், இதே போல பல வீடுகளுக்குள் நுழைந்திருப்பார் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எனவே, காவல்துறையினர் சந்தேகிக்கும் படியான நபர்களை பார்த்தால், தங்களிடம் தெரிவிக்குமாறு, கூறியுள்ளனர்.