Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கடைக்கு சென்ற வியாபாரி…. வாலிபர் செய்த செயல்….. காட்டிக்கொடுத்த சிசிடிவி காட்சிகள்…!!

ஸ்கூட்டர் திருடிய குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள தக்கலை பகுதியில் அனீஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் சிமெண்ட் செங்கல் விற்பனை செய்யும் கடை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் தனது ஸ்கூட்டரில் குன்னம்பாறை பகுதியில் இருக்கும் ஒரு கடைக்கு பொருட்கள் வாங்குவதற்காக சென்றுள்ளார். இதனையடுத்து கடைக்கு சென்று விட்டு திரும்பி வந்து பார்த்த போது ஸ்கூட்டர் காணாமல் போனதை கண்டு அனீஸ் அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்துள்ளனர். அதன் அடிப்படையில் புலிப்பனம் பகுதியை சேர்ந்த சஜீவன்ராஜ் என்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்து அவரிடமிருந்து ஸ்கூட்டரை பறிமுதல் செய்துள்ளனர்.

Categories

Tech |