பேருந்துக்குள் குடை பிடித்த படி பொதுமக்கள் பயணம் செய்யும் காட்சிகள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள காமராஜர் பேருந்து நிலையத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு அரசு பேருந்து ஒன்று புறப்பட்டுள்ளது. இந்நிலையில் அப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக சேதமடைந்த பேருந்தின் மேற்கூரை வழியாக மழை நீர் ஒழுகியுள்ளது. இதனால் இருக்கையில் அமர முடியாமல் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டுள்ளனர். அதிலும் சிலர் குடை பிடித்த படி பேருந்தில் பயணம் செய்துள்ளனர்.
இதற்கிடையில் மழைகோட்டு அணிந்த படி ஓட்டுனர் பேருந்தை இயக்குவதை சிலர் செல்போனில் படம் பிடித்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளனர். எனவே சேதமடைந்த பேருந்துகளை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனை சிலர் படம் பிடித்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளனர்.