சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த மீனவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஜார்ஜ் கோட்டை பகுதியில் தொம்மை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அனிஸ் இருதயராஜ் என்ற மகன் உள்ளார். இவர் மீன்பிடி தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் அனிஸ் இருதயராஜ் மீன்பிடி துறைமுக பகுதியில் வைத்து கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த தென்பாகம் காவல்துறையினர் அனிஸ் இருதயராஜை கைது செய்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அவரிடம் இருந்த 50 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.