Categories
சேலம் மாவட்ட செய்திகள்

இடிபாடுக்குள் கிடந்த வாலிபரின் சடலம்…. சேலத்தில் பெரும் பரபரப்பு….!!

கட்டிட இடிபாடுக்குள் வாலிபர் சடலமாக கிடந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சேலம் மாவட்டத்தில் உள்ள குகை ராமலிங்கசாமி கோவில் தெருவில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் உள்ள ஒரு வீட்டை விலைக்கு வாங்கி இருக்கிறார். இதனையடுத்து ஆறுமுகம் அதில் புது வீடு கட்ட முடிவு செய்தார். இதற்காக அந்த பழைய வீட்டை கூலி தொழிலாளி மூலம் இடிக்கும் பணி கடந்த 2 நாட்களாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தொழிலாளர்கள் வீட்டை இடிக்கும் பணியில் ஈடுபட்டபோது கட்டிட இடிபாடுக்குள் சிக்கி வாலிபர் ஒருவர் சடலமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து தொழிலாளர்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அந்த தகவலின்படி போலீஸ் துணை கமிஷனர் மோகன்ராஜ் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டார்.

அப்போது இறந்து கிடந்த வாலிபர் அதே பகுதியை சேர்ந்த முருகன் மகன் ராஜேஷ்குமார் என்பது காவல்துறையினருக்கு தெரியவந்தது. அதன்பின் ராஜேஷ்குமாரின் சடலத்தை காவல்துறையினர் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் ராஜேஷ்குமாரின் பெற்றோர் காவல் நிலையத்தில் அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது “எங்களது மகனை சிலர் கடத்தி கொலை செய்து கட்டிட இடிபாடுகளுக்குள் போட்டுள்ளனர். இதனால் எங்களது மகன் சாவில் சந்தேகம் இருக்கிறது. எனவே எங்களது மகனை கொலை செய்தவர்களை கண்டுபிடிக்க வேண்டும்” என்று அவர்கள் புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளனர். அதன்படி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து வாலிபர் ராஜேஷ்குமார் கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |