ரயில்வே தண்டவாளத்தில் பெண் பிணம் கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திலகர் நகர் பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் இளம் பெண் பிணமாக கிடப்பதாக தூத்துக்குடி காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் தண்டவாளத்தில் 20 வயது இளம்பெண் முகம் சிதைந்த நிலையில் பிணமாக கிடந்ததை பார்த்தனர். இதுகுறித்து காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் அந்த பெண் மும்பையிலிருந்து நாகர்கோவில் சென்ற ரயிலில் அடிபட்டு இறந்தது தெரியவந்தது.
இதனையடுத்து காவல்துறையினர் அவரது உடலை கைப்பற்றி கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அவர் யார்?, தண்டவாளத்தை கடக்கும் போது அவர் அடிபட்டு இறந்தாரா அல்லது அவர் யார் அல்லது ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.