மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்ததால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலில் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. இதனால் அப்பகுதியில் இருக்கும் மரங்கள் ஆங்காங்கே முறிந்து சாலையில் விழுவதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆனைமுடி சோலை என்ற இடத்தில் 5-க்கும் மேற்பட்ட மரங்கள் அடுத்தடுத்து முறிந்து விழுந்ததால் அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலைகளில் விழுந்த மரங்களை வெட்டி அப்புறப்படுத்தியுள்ளனர். மேலும் ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.