தென்னாப்பிரிக்காவில் உருவான ஓமைக்ரான் வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்த நிலையில் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் ஓமைக்ரான் சிறப்பு வார்டு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக மருத்துவத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். அதிதீவிர சிகிச்சைப் பிரிவாக 30 படுக்கைகள் கொண்ட சிறப்பு தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளன. 24 மணி நேரமும் சிகிச்சை அளிக்க 16 பேர் கொண்ட மருத்துவ தயார் நிலையில் உள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.
Categories