Categories
மாநில செய்திகள்

ALERT: நாளை உருவாகிறது புயல் சின்னம்…. தமிழகத்தில் மீண்டும் கனமழை…. புதிய அலர்ட்….!!!!

தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றது. இது மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 12 மணி நேரத்திற்குள் தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். அதன் பிறகு 24 மணி நேரத்தில் மத்திய வங்கக் கடலில் அது புயலாக மாறும். பின்னர் வடமேற்கு திசையில் நகர்ந்து வருகின்ற 4ஆம் தேதி காலை வடக்கு ஆந்திரா -தெற்கு ஒடிசா இடையே தீவிர புயலாக கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

அதனால் தமிழகத்தின் தென் மற்றும் உள் மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகத்தில் 4ஆம் தேதி முதல் 6ம் தேதி வரை 3 நாட்களுக்கு சில மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதன்படி நீலகிரி, கோவை, சேலம், தர்மபுரி, ஈரோடு, தேனி, மதுரை, சிவகங்கை மற்றும் விருதுநகர் ஆகிய 9 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அந்தமான் கடல் பகுதியில் மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிக்குச் செல்ல வேண்டாம்.

மேலும் புயல் கரையை கடக்க உள்ளதால் ஒரிசா கடலோரப் பகுதிகளில் மணிக்கு 70 கிலோ மீட்டர் வேகம் வரை யில் சூறாவளி காற்று வீசக் கூடும் என்பதால் மீனவர்கள் நாளை முதல் மூன்று நாட்களுக்கு அப்பகுதிக்குச் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |