ஒமிக்ரான் வகை கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட இருவரில் ஒருவர் தென் ஆப்பிரிக்கா நாட்டைச் சேர்ந்தவர் என்று கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர் விளக்கமளித்துள்ளார். இது தொடர்பாக கர்நாடக அமைச்சர் தெரிவித்துள்ளதாவது: இன்று இந்தியாவில் இருவருக்கு ஒமிக்ரான் வகை கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. அதில் ஒருவர் தென் ஆப்பிரிக்கா நாட்டை சேர்ந்தவர். மற்றொருவர் கர்நாடகாவை சேர்ந்த மருத்துவர். அவருக்கு வெளிநாட்டு பயண தொடர்பு எதுவும் கிடையாது. இருப்பினும் அவருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று விளக்கம் அளித்துள்ளார்.
Categories