Categories
தேசிய செய்திகள்

“WhatsApp மூலம் uber”….  விரைவில் புதிய வசதி அறிமுகம் …..!!!!

உபெர் இந்தியா நிறுவனம், வாட்ஸ்அப் சாட்பாட் சேவையை பயன்படுத்தி உபெர் ரைடு முன்பதிவு செய்யும் வசதியை அறிமுகம் செய்யவுள்ளது.

உபெர் இந்தியா நிறுவனம் வாட்ஸ்அப் சாட்பாட் கொண்டு முன்பதிவு செய்யும் வசதியை அறிமுகம் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் இதனை உபெர் செயலியை செல்போனில் இன்ஸ்டால் செய்யாமலேயே உபெர் ரைடுகளை முன்பதிவு செய்ய முடியும்.  உபெர் செயலியில் மேற்கொள்ளப்படும் பயனாளர் பதிவு, ரைடு முன்பதிவு, பயணத்திற்கான ரசீது உள்ளிட்டவைகளை வாட்ஸ்அப் சாட்பாட் மூலமாகவே பெற்றுக் கொள்ள முடியும் என உபெர்  நிறுவனம் தெரிவித்துள்ளது.

உலக அளவில் இதுபோன்ற வசதி இந்தியாவில் தான் முதல் முறையாக அறிமுகம் செய்யப்பட உள்ளது. விரைவில் டெல்லியில் இந்த அம்சத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவர இருக்கின்றது. அதன் பிறகு நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் இந்த வசதி படிப்படியாக அறிமுகம் செய்யப்படும். தற்போது இந்த வசதி ஆங்கில மொழியில் மட்டும் உள்ளது. விரைவில் பல்வேறு மொழிகளில் வழங்கப்பட உள்ளது என்று உபெர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |