Categories
மதுரை மாவட்ட செய்திகள்

10 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம்…. 30 ஆண்டுகளாக ஆக்கிரமித்த நபர்கள்…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!

10 கோடி ரூபாய் மதிப்புள்ள கோவிலுக்கு சொந்தமான நிலத்தை அதிகாரிகள் மீட்டனர்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான இடம் பொன்மேனி காளிமுத்து நகர் பகுதியில் உள்ளது. சுமார் 2 ஏக்கர் பரப்பளவுடைய கோவில் நிலத்தை 30 ஆண்டுகளுக்கும் மேலாக பலர் ஆக்கிரமித்துள்ளனர். இதன் மதிப்பு 10 கோடி ரூபாய் ஆகும். இதுதொடர்பாக கோவில் நிர்வாகத்தினர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு உத்தரவிட்டுள்ளது.  இந்நிலையில் கோவில் இணை கமிஷனர் செல்லதுரையின் தலைமையில் அதிகாரிகள் காவல்துறையினர் பாதுகாப்புடன் அங்கு சென்றுள்ளனர். அதன்பிறகு பொக்லைன் எந்திரம் மூலம் கட்டிடங்களை இடித்து கோவிலுக்கு சொந்தமான இடத்தை மீட்டு அங்கு அறிவிப்பு பலகை வைத்துள்ளனர்.

Categories

Tech |