Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

கடிதம் அனுப்பியும் பயனில்லை…. பூட்டி சீல் வைக்கப்பட்ட கடைகள்…. அதிகாரிகளின் நடவடிக்கை…!!

வாடகை தொகையை செலுத்தாத கடைகளை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர்.

அரியலூர் மாவட்டத்திலுள்ள காந்தி மார்க்கெட் பகுதியில் 51 கடைகளும், பேருந்து நிலையத்தில் 50 கடைகளும் வாடகைக்கு விடப்பட்டுள்ளன. இந்த கடைகளுக்குரிய வாடகை பாக்கியை உரிமையாளர்கள் செலுத்தாமல் இருந்துள்ளனர். இந்நிலையில் நகராட்சி வருவாய்துறையினர் கடை உரிமையாளர்களிடம் நேரில் சென்று வாடகை பாக்கியை கேட்டுள்ளனர். மேலும் தபால் மூலம் நினைவூட்டல் கடிதம் அனுப்பியுள்ளனர்.

இதனையடுத்து பகுதியளவு தொகையை செலுத்திவிட்டு சில நாட்களில் முழு தொகையும் செலுத்துவதாக உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் 5 கடைகளின் உரிமையாளர்கள் மட்டும் எந்தவித தகவலும் தெரிவிக்காமல் இருந்ததால் நகராட்சி ஆணையர் தமயந்தி மேற்பார்வையில் ஊழியர்கள் 5 கடைகளை பூட்டி சீல் வைத்துள்ளனர்.

Categories

Tech |